CP/K/ Akurana Zahira College (National School)  

                                                        Bulugahatenna-Akurana - SriLanka                                 

                      அக்குறணை ஸாஹிரா கல்லூரி - புளுகொஹதென்ன - அக்குறணை

Home  About Us  History  Management  Our Staff  Boards  Achivements  Events  Gallary  Students Forum  Softwares Text Box: கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தில் அக்குறணை என்னும் பிரதேசத்தில் புளுகொஹதென்ன  என்னும் அழகிய கிராமத்தில் அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையாக அமைந்துள்ளது.  இப்பாடசாலையின் வரலாறு மிகவும் நீண்டது. 
இப்பாடசாலை, 1938.06.02 ஆம் திகதி வியாழக்கிழமை 100 ஒ 100  கொண்ட கட்டடமொன்றில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.  இப்பாடசாலையின் பெயர் புளுகொஹதென்ன  அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என அழகைகப்பட்டது.  இப்படாடசாலையின் முதலாவது அதிபராக மர்ஹும் டி.எம்.எஸ்.ஹமீட் இருந்தார்.  இப்பாடசாலையின் முதல் மாணவனாக ஒமர்தீன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  அடுத்து ஸஹாப்தீன் என்னும் மாணவன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு முதல் நாளில் 7 பிள்ளைகளும், 2ம் நாளில் 4 பிள்ளைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 
1938.06.06 இல் கே.எம்.ஏ. பாத்துமுத்து எனும் மாணவியும், உம்மு சல்மா, கைருன்னிஸா எனும் மாணவியரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  அக்குறரணை முஸ்லிம்களின் வரலாற்றிலேயே முதன் முதலாக பெண் பிள்ளைகள் அனுமதி பெற்றது இப்பாடசாலையில் என்பது முக்கிய  விடயமாக  விளங்குகின்றது. 
 இதனைத் தொடர்ந்து, 1939 இல் வந்த அதிபர் கே. கணபதிபிள்ளை என்பவரின் காலத்தில் புளுகொஹதென்னையைச் சேர்ந்த சூழவுள்ள பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  இதனால் மாணவர் தொகை 150 ஐத் தாண்டினாலும் ஆசிரியர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் மாத்திரமே கடமையாற்றினர். இவ6ரது காலத்திலேயே வருடாந்தப் பரீட்சையும் பெற்றார் ஆசிரியர் சங்கமும் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டன.
பாடசாலை வரலாற்றில் அதிக காலம் சேவையாற்றியவர் திரு. கார்த்திகேசு ஆவார். 1939.05.02 முதல் 1953.12.18 வரை கடமையாற்றினார். இவரது காலப்பிரிவிலேயே தரம் 10 வரையான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 
 
இதனைத் தொடர்ந்துஎன்.ஏ.எச்.எம் அன்வர் கடமையாற்றினார். இவரது காலத்தில் எஸ்.எஸ்.சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், கட்டடங்களும் 3 ஆக மாறின.  அத்துடன் விளையாட்டுப் போட்டி, கலைவிழா,  மேலும் கலா வல்லி என்ற சஞ்சிகையும் முதன் முதலில் வெளியிடப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து பல அதிபர்கள் எமது பாடசலைக்கு சேவையாற்றிச் சென்றார்கள்.  1970..03.24  எம்.ஜே. ஆப்தீன் என்பவரின் காலத்திலேயே இப்பாடசாலை மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது.  அதிபர் ஏ.எச்.எஸ். முஹம்மட்  காலத்தில் இப்பாடசாலையில் உயர்தரப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன், வரலாற்றில் முதன் முறையாக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள்  சென்றதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இருமாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல்லும் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பல அதிபர்கள் கடமையாற்றிச் சென்றார்கள். 
 
அதிபர் எச்.எம். பஷீர் என்பவர் காலத்தில் இருமாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் பெற்றார் ஒருவர் தனது மகனின் ஞாபகார்த்தமாக   சரூக்  என்னும் பெயரில் ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தார்.  இவரது காலத்தில் மாணவர்கள் அறிவுக்களஞ்சியப் போட்டிகளில் பங்கு பற்றி மாகாண, தேசிய ரீதியில் பரிசில்களைப் பெற்று பாடசாலைக்கு புகழ் சேர்த்தனர். 
இதன் பின்னர், 1978.01.16 முதல் 1980.01.01 வரை கடமையாற்றிய ஏ.ஸீ.எம். பளீல் என்பவரின் காலத்தில் பாடசாலைச்சின்னம் அறிமுகப் படுத்தப்பட்டதுடன் பாடசாலைக்கான கீதமும் இயற்றப்பட்டது. அத்தோடு பாடசாலைக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. விளையாட்டு மைதானம் விரிவுபடுத்தப்பட்டு, அக்குறணை ஸாஹிரா மகா வித்தியாலயம் எனப் பாடசாலையும் பெயர் மாற்றம் பெற்றது. 
 
பின்னர், 1980.01.01 - 1984.01.01 வரை அதிபராக ஏ.ஸீ.எல்.எம். தாஹிர் என்பவர் கடமையாற்றினார். இவரது காலப்பிரிவில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்தமை,  அகில இலங்கை ரீதியிலான விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்கள் தெரிவானமை, பல்கலைக்கழக அனுமதி, தொண்டர் ஆசிரியர் நியமனம், அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற விளையாட்டுப் பொட்டியில் எமது பாடசாலை முதலாமிடம் பெற்றமை என்பன முக்கிய நிகழ்வுகளாகும். 
1984.01.01. முதல் 1987.03.13 வரையான காலப்பகுதிக்கு இஸட்.ஏ.எம் ஹனிபா அதிபராக இருந்தார். இவரது காலப்பிரிவில் ஏ மண்டபம் காரியாலயமாக மாற்றப்பட்டதுடன்,  ஆசிரியர் விடுதியும் கட்டப்பட்டது.  பாடசாலையின் நெருக்கடியை நிவர்த்திக்குமுகமாக பாடசாலையை இருநேரங்களாக இயக்கினார். இடப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டதுடன், இருமாடிக் கட்டிடமும் (கு. ர்யட) கட்டப்பட்டது.  கட்டிடங்களுகடகு யு முதல் ஐ வரையான பெயர்கள் சூட்டப்பட்டதுன், தென்றல் என்ற சஞ்சிகையும் உயர்தர வகுப்பு மாணவர்களால் வெளியிடப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றதுடன், விளையாட்டுப்பொட்டிகள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபட்டு பல வெற்றிகளையும் பெற்றனர்.  மாணவத் தலைவர்கள் ஒன்றுகூடலும் இடம் பெற்றது இவரது காலப்பிரிவிலாகும். 
எச்.எம்.எம் ஹலீம் அதிபராக  இருந்த  காலத்தில் மாணவர்கள் வலயமட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, 1988.10.05 - 1989.02.03 வரை பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிய என்.எல்.ஏ. வஹாப் அவர்கள் தற்காலிக அதிபராக  கடமை பொறுப்பை ஏற்றார்.  இக்காலப் பிரிவில் பாடசாலையின் பாதுகாப்புக்காகவும், பாடசாலையின் ஆவணங்களின் பாதுக்காப்புக்காகவும் கவனம் செலுத்தப்பட்டது.  இவர் 1990.02.07 வரை அதிபராகக் கடமையாற்றினார். 
அதன் பின்னர், 1990.02.07- 1992.01.05  வரையில் ஏ.சீ.ஏ. ரஸ்ஸாக் அதிபராகக் கடமையாற்றினார். இவரது காலப்பிரிவிலேயே பாடசாலை கூட்டுறவுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கான கேட்போர்கூடமும் மத்திய மாகாணக் கல்வியமைச்சினூடாகப் பெறப்பட்டது. 
இதன் பின்னர் ஜனாப் தாஸிம் என்பவர் அதிபராகக் கடமையாற்றிச் சென்றார் அதனைத் தொடர்ந்து எம். ஜெய்னுலாப்தீன் அவர்கள் அதிபராக 1992..05.20 முதல் 194.09.10 வரை அதிபராக இருந்துள்ளார்கள். இவரு காலப்பிரிலில் இப்பாடசாலையானது அக்குறணை ஸாஹிரா மத்திய கல்லூரி என தரயமுயர்த்தப்பட்டது. தமிழ்த்தினப் போட்டி விிருதுகளும், விஞ்ஞான ஒன்றியமும் ஆரம்ம்பிக்கப்பட்டது விசேடமாகும்.  1994 - 1997 வரையான காலப்பகுதியில் அதிபராக ஏ.எச்.எம் ஹுஸைன் என்பவரின் பிரிவில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களின் அயராத முயற்சியின் பலனாக  எமத கல்லூரியின் நூலகத்திற்காக இப்பகுதி தனவந்தன் ஒருவரின் நிதி உதவி மூலம் அடிக்கல் நடப்பட்டது. 
197.01.06 தொடக்கம் 1999.01.2 வரை ஜனாப் ஏ.எல்.ஏ. ஜலீல் அதிபராகக் கடமையாற்றினார். இவரது காலத்தில் கணினி அன்பளிப்பு,  காரியாலயம் புனரமைப்பு,  தொலைபேசி வசதி,  ஆசிரியர்தினக் கொண்டாட்டம், தரம் 1 மாணவர்களின் கலை விழா போன்றன இடம் பெற்றமை முக்கிய நிகழ்வுகளாகும். மேலும் பாடசாலையின் வைரவிழா  ஏற்பாடுகளும் நடைபெற்றன்.  இக்காலப் பிரிவில் அக்கால ஹாரிஸ்பத்துவ  தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக  இருந்த டாக்டர் மவ்ரூப் அவர்களின் முயற்சியினால் தொலைப்பாட்சிக் பெட்டியொன்று, பாடசாலை விளையாட்டு உபகரணங்கள் போன்றன பெறப்பட்டன.  மேலும் இவரது பெரு முயற்சியினால் 12.01.1999 ஆம் திகதியன்று எமது பாடசாலையானது ஒரு தேசியப் பாடசாலையாக  தரமுயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதி அதிபராகக் கடமையாற்றிய ஜனாப் எஸ.எம்.எம். நஸீர் 22.01.1999 இல் தற்காலிக அதிபராக்க கடமையேற்றார் இவரது காலத்திலேயே மலர் வெளியீடும், வைரவிழாக் கொண்டாட்டங்களும் இடம்பெற்றன. மேலும் கல்வி அமைச்சு மூலம் 4 கணினிகளும் கிடைக்கப்பெற்றன. பெற்றோரின் ஒத்துழைப்புடன் சிறுவர் ப+ங்காவும் நிறைவு செய்யப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து 24.04.2000 இல் எஸ். ஜவாஹிர் சாலி அதிபராகப் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்துடனும், பழைய மாணவர் சங்கத்துடனும் இணைந்து அக்காப்பிரிவ்ல குழுக்களின் பிரதித் தலைவராக இருந்த அமைச்சர் ரவு+ப் ஹக்கீம் அவர்களிடம் 2001 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவினை இப்பாடசாலையில் நடாத்துவதற்கு கேட்டதற்கிணங்க, தேசிய மீலாத் விழா இப்பாடசாலையில் நடைபெற்றதுடன்,  அதன் மூலம் பாடசாலையில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. நவீன மூன்றுமாடிக் கட்டிடம், பாரிய கேட்போர்கூடம்,  மைதான விரிவாக்கம்,  பாடசாலையின் முகப்புத் தோற்றம் பொன்ற பல இன்னேரன்ன பணிகள் இடம் பெற்றன. இவரது காலப்பிரிவில்தான் பாடசாலையின் கால்பந்தாட்ட அணி ஆரம்பிக்கப்பட்டு பல தேசியமட்ட போட்டிகளில் கலந்து வெற்றிகளையும் பெற்றது. 
இதனைத் தொடர்ந்து, 203.06.06. முதல் ஜனாப் எம். பரீது அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் காரியாலயம் புனரமைக்கப்பட்டதுடன், பரீட்சைப் பெறுபேறுகளில் வளர்ச்சி, விளையாட்டுத் துறையில் மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவானமை உட்பட பல்வேறு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்பட்டது. அத்துடன் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களால் வெளியிடப்படும் அருவி  சஞ்சிகை இவரது காலத்தில்தான் முதன் முதலாக வெளிவந்தது. 
இவரைத் தொடர்ந்து 207.02.08 அன்று ஜனாப் வை. ஜுனைதீன் என்பவர் அதிபராக பொறுப்பேற்றார். இவரது காலப்பிரிவில் தரம் 1 இற்கான நவீன வகுப்பறை ஆரம்பிக்கப்பட்டதுடன் பல்வேறு முன்னேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. 
அதனைத் தொடர்ந்து 2010.02.22 அன்று புதிய அதிபராகக் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட தற்போதைய அதிபரான அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். இர்ஷாத் அவர்களால் பாடசாலையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கல்வி அமைச்சினதும் இடர் முகாமைத்துவ அமைச்சினதும் நிதி மூலம் ரூ. 56 இலட்சம் செலவில் பாடசாலை மைதானம் புனரமைக்கப்பட்டமை, ரூ. 13 இலட்சம் செலவில் கல்வி அமைச்சினால் மின்சார இணைப்புக்களை ஒழுங்குபடுத்தி பாடசாலையில் சகல கட்டடங்களுக்கும் மின்னிணைப்புக்களை ஏற்படுத்தியமை, சுமார் 25 வருட காலமாக நிலவிய தளபாடப் பற்றாக்குறையை கல்வியமைச்சின் மூலம் 10 இலட்சம் ரூபா பெறுமதியான   தளபாடங்களைப் பெற்று நிவர்த்தி செய்தமை,  4 1ஃ4 இலட்சம் ரூபா செலவில் கமநெகும வேலைத்திட்டம் மூலம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியினால்4 அறைகளைக் கொண்ட புதிய மலசலகூடத் தொகுதியொன்றை நிர்மானித்தமை, பெற்றோரின் உதவியுடன் 2011, 2012 ஆம் ஆண்டிற்கான  தரம் 1 இன் வகுப்பறைக் கட்டடங்களை கவர்ச்சிகரமாக ஆக்கியமை, சுற்றாடல் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் அடிப்படையில் பாடசாலையின் சுற்றாடலை முழுமையாக ஒழுங்குபடுத்தி அழகுபடுத்தியமை, வகுப்பறைகளை பெற்றோரின் உதவியுடன் புனரமைத்தமை போன்ற பௌதிக  அடிப்படையிலான வேலைத்திட்டங்களும், 13 வயதின் கீழ், 15 வயதின் கீழ், 19 வயதின் கீழ் மூன்று கடினபந்து (  )  கிரிக்கட் அணிகள் உருவாக்கப்பட்ட, 13 வயதின் கீழ் அணி இலங்கை பாடசாலைக் கிரிக்கட் அணி களுக்கிடையிலான நாடளாவிய ரீதியிலான முதலாம் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு இ்மமுநை தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. 
மாணவர்களின் கல்வி நடவடிக்கையிலும் இவ் அதிபரின் தலைமையின் கீழ் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, 2010 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் 34 பேர் சித்தியடைந்தமை, 2011 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 5 பேர் சித்தியடைந்ததுடன் 50 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றமை, 201 ஆம் ஆண்டு க.பொ.த (உ.த) பரீட்சையில் நூறு வீதம் சித்தியடைந்தமை போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். 
அத்துடன் மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை முன்னேற்றவும் பல்வேறு நடவக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையுமட் குறிப்பிடத்தக்கதாகும். 
 
 
 
 
 

75 வருட வரலாற்றிலே பாடசாலையின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கி வழிநடாத்திய

அதிபர் குழாம்

01

D.M.      SHAHUL HAMEED

02.06.1938

11.09.1938

02

K.           KANAPATHIPILLAI

11.09.1938

25.03.1939

03

S.            KARTHIKESU

02.05.1939

18.12.1953

04

H.M.       BASHEER

18.12.1953

04.01.1954

05

S.A.H.M.ANWAR

04.01.1954

04.07.1968

06

N.M.       RASIK

04.07.1968

26.02.1970

07

N.M.       ISMAYIL

26.02.1970

20.03.1970

08

M.G.       AABDEEN

20.03.1970

15.07.1970

09

A.H.S.     MUHAMMAD

15.07.1970

06.02.1975

10

U.L.M.    KUWAILDH

06.02.1975

19.02.1975

11

A.M.       LEBBE

19.02.1975

24.02.1975

12

H.M.       BASHEER

24.02.1975

16.01.1798

13

A.C.M.   FALEEL

16.01.1798

01.01.1980

14

A.C.M.   THAHIR

01.01.1980

01.01.1984

15

Z.A.M.    HANIFFA

01.01.1984

13.03.1987

16

H.M.       HALEEM

14.03.1987

 

17

N.M.M.  WAHAB

 

03.02.1989

18

M.M.M.  SUHAIB

03.02.1989

03.03.1990

19

A.C.A.    RAZZAK

03.03.1990

 

20

A.C.M.   THAASIM

 

20.05.1992

21

M.           JAINUDEEN

20.05.1992

10.09.1994

22

A.H.M.   HUSSAIN

10.09.1994

06.01.1997

23

A.L.A.    JALEEL

06.01.1997

22.01.1999

24

S.M.M.   NASEER

22.01.1999

24.04.2000

25

S.            JAWAHIRSALY

24.04.2000

05.06.2003

26

M.           FAREEDU

06.06.2003

08.02.2007

27

Y.            JUNAIDEEN

09.02.2007

21.02.2010

28

A.S.M.    IRSHAD

21.02.2010

Upto now